இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் செயல்பாடு! வெளியிடப்பட்டுள்ள அதிருப்தி
srilanka
corona virus
tourism
By Vasanth
உக்ரைன் நாட்டில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகள், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபையுடன் செய்துக்கொண்டுள்ள அடிப்படை இணக்கப்பாடுகளை மீறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பயணம் செய்யும் சில இடங்கள் சம்பந்தமாக சுற்றுலா ஊக்குவிப்பு சபைக்கு அறிவிக்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளை யால வனவிலங்கு சரணாலயத்திற்கு அழைத்துச் சென்ற 27 ஜீப் வண்டிகளை ஓட்டிச் சென்ற சாரதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தம்மை தனிமைப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் முன்கூட்டி தமக்கு அறிவிக்கவில்லை என்பதால், தாம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றதாக அந்த சாரதிகள் கூறியுள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி