வட கிழக்கில் சுற்றுலாத்துறையை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு: கேள்வி எழுப்பும் சாணக்கியன்

Shanakiyan Rasamanickam Sri Lanka Tourism Tourism
By Aadhithya Jun 19, 2024 10:54 AM GMT
Report

சுற்றுலாப் பயணிகளின் வருகை வடக்கு மற்றும் கிழக்கில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா சாணக்கியன் (R. Shanakiyan) கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில், நேற்று (18) உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தனது உரையில் குறிப்பிடுகையில், "வடக்கு, கிழக்கினை பொறுத்த வரையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளது. கிழக்கு மாகாணத்தின் அறுகம்பை (Arugambay) பிரதேசத்தில் அரசாங்கத்தின் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத போதும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர் ஏனெனில் அங்கு கடல் சறுக்கலுக்குரிய கடல்வளம் காணப்படுவதாலாகும்.

நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளுக்கு பூட்டு

நிதி மோசடி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போக்குவரத்து இன்று பிரதானமான பிரச்சனையாக உள்ளது. யாழ்ப்பாணத்தினை (Jaffna) பொறுத்த வரையில் பலாலி விமான நிலையம் (Jaffna International Airport) ஊடாக சில சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சூழல் உள்ளது. ஆனால் மட்டக்களப்பில் (Batticaloa) உள்ள விமான நிலையம் கடந்த காலத்தில் இயங்கும் நிலையில் இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தினுள் விமானங்கள் தரையிறங்குவதில்லை.

வட கிழக்கில் சுற்றுலாத்துறையை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு: கேள்வி எழுப்பும் சாணக்கியன் | Tourism Struggle Sri Lanka North East Shanakiyan

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் போன்ற கரையோர பிரதேசங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையானதொரு சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் இன்று வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பரவலாக பேசப்படும் விடயம் யாதெனில் "VFS" என்ற தனி நிறுவனம் இன்று சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பான நிதி மோசடியினை மேற்கொள்கின்றது. இதற்கு பிற்புலக் காரணிகளாக அமைச்சர்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கிறது ஆசிரியர் சங்கம்

சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கிறது ஆசிரியர் சங்கம்

தொடருந்து சேவை

எவராக இருந்தாலும் இலங்கைக்குள் வருவதற்கு ”VISA” விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்தினால் ”VFS” என்ற நிறுவனத்தினால் அரசாங்கத்திற்கும் அந்தப் பணம் இல்லாமலாக்கப்படுகின்றது. பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பிற்கு புகையிரதம் வருவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த முயற்சியினால் விசேட கடுகதி தொடருந்து மட்டக்களப்பிற்கு வருகின்றது.

வட கிழக்கில் சுற்றுலாத்துறையை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு: கேள்வி எழுப்பும் சாணக்கியன் | Tourism Struggle Sri Lanka North East Shanakiyan

ஆனால் மட்டக்களப்பிற்கு வருகின்ற தொடருந்துப் பாதையினை கூட இன்று வரை புனரமைப்பு செய்யாமையின் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் 20 ஆம் திகதி வரவிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஏற்படுத்துவது, தொடருந்துசேவையினை ஆரம்பிப்பது மிக முக்கிய விடயமாக உள்ளது. ஏனெனில் தென்னிந்தியாவில் உள்ள எங்களது தமிழ் சகோதர மக்களில் குறிப்பிட்ட தொகையினர் இலங்கைக்கு வந்தால் வடக்கு, கிழக்கினை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள் மூலமாக வருமானமீட்டுவதற்கான வழியினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென தொடர்ச்சியாக கூறக் காரணம் நாங்களே எங்களது பிரதேசங்களை கட்டியெழுப்ப முடியும். அதிபர் அவர்கள் இன்று கூட சிறிய பெரும்பான்மையுடன் மாகாண சபைக்கு புதிதாக ஒரு சட்ட மூலத்தினை கொண்டு வரத் தேவையில்லை.

வட கிழக்கில் சுற்றுலாத்துறையை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு: கேள்வி எழுப்பும் சாணக்கியன் | Tourism Struggle Sri Lanka North East Shanakiyan

சுமந்திரன் (M.A Sumanthiran) அவர்கள் தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார். முன்பிருந்த மாகாண சபை தேர்தல் முறையில் தேர்தலினை நடத்தக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும்.

அதிபருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அவர் தமிழ் மக்களுக்கு கூறும் சில விடயங்களையாவது செய்ய வேண்டும். இவற்றினை மேற்கொள்ளாது செயற்படுவதனால் தமிழ் மக்களை ஏமாற்றுவதனையே தனது நோக்கமாக கொண்டுள்ளார் என்பதனையே நாங்கள் எண்ண முடியும்” என தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

10 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022