யாழ்.கடற்பரப்பில் மூழ்கிய சுற்றுலா படகு: நூலிழையில் தப்பிய பயணிகள்
நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாவிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓரிரு நிமிடங்களில் மூழ்கிய படகு
இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் அவதானித்த விரைந்து செயற்பட்டு சேசமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றி ஓரிரு நிமிடங்களில் குறித்த சுற்றுலாவிகள் படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் கடற்படையினரது படகு சம்பவ இடத்திற்கு வந்து மிட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
