இன்று காலை பயங்கரம் : சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி கோர விபத்து
Sri Lanka Police
Sri Lanka Tourism
Sri Lanka Police Investigation
By Sumithiran
சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை மிதிகம தொடருந்து நிலையத்தில் ரஜரட்ட ரெஜினி விரைவு தொடருந்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா பயணி உட்பட இருவர் படுகாயம்
இந்த விபத்தில் சுற்றுலா பயணி ஒருவரும் வழிகாட்டி ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடருந்து மஹோ சந்தியை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விபத்தின் போது காரில் இரண்டு சுற்றுலா பயணிகளும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எச்சரிக்கை மணி அடித்த நிலையிலும்
எச்சரிக்கை மணி அடித்த நிலையிலும், எச்சரிக்கை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையிலும் கார் தொடருந்து கடவையை கடக்க முயன்றதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |