உலகின் பாரம்பரிய தீவு ஆனால் செல்வது அவ்வளவு எளிதல்ல அந்த தீவு எதுவென்று தெரியுமா!
அதிசயங்கள் நிறைந்து பறந்து இருக்கும் இந்த உலகை சுற்றிப் பார்ப்பதென்பதே ஒரு சாகசமான விடயம் தான்.
சுற்றுலாப்பயணங்கள் மூலம் உலகில் மறைந்திருக்கின்ற அழகிய பிரதேசங்களை பார்வையிட ஆண்டுதோறும் மக்கள் திரண்டு செல்வது வழக்கம்.
நீரினால் அமைந்த உலகில் தீவுகள் என்றாலே தனி அழகு தான், அனால் இந்த தீவுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல.
ஹோவி தீவு
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியூசிலாந்திற்கு செல்லும் வழியில் 700 கி.மீ தொலைவில் அமைந்தடித்துள்ள ஹோவி தீவு தான் அது.
இந்த தீவில் மொத்தமாக வாழ்கின்ற மக்களின் தொகை 400, தீவிலும் அதே எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு மாத்திரம் தான் அனுமதியுள்ளது.
அங்கிருந்து ஒரு சுற்றுலாப்பயணி வெளியேறினால் தான் இன்னொருவர் செல்ல அனுமதி கிடைக்குமாம், அதேபோல் இங்குள்ள விடுதிகள், உணவகங்களும் மிகவும் விலையுயர்ந்ததாகவே இருக்கிறதாம்.
இதனால் தான் இந்த தீவுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல என்று கூறப்படுகிறது.
இறகுகள் இல்லாத பறவை
அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே அமைந்துள்ள இந்த சிறிய தீவின் அகலம் 2 கிலோ மீற்றர் நீளம் 14 கிலோ மீற்றர் ஆகும்.
மனித நடமாட்டம் இல்லாத காலம் தொட்டு இந்த தீவில் இறகுகள் இல்லாத நிறைய பறவை இனங்கள் வசித்து வந்துள்ளன, அவற்றை உண்ண பாம்புகளோ, முட்டைகளை திருட எலிகளோ, எலிகளை பிடிக்க பூனைகளோ, கழுகுகளோ இல்லாமல்,சுவர்க்கம் போல அழகான தோற்றத்தில் அமைந்திருந்ததே இந்த தீவின் சிறப்பாக இருந்தது.
அழகான கடலோரக்காட்சியும், உலகில் எங்கேயும் காணமுடியாத வித்தியாசமான மரம், செடிவகைகளும் இங்கே காணப்பட்டது. கென்டியா எனப்படும் ஒரு வகை பனைக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல கிராக்கி இருக்கிறது
ஆனால் இந்த இன மரங்கள் உலகிலேயே இங்கு மட்டும் தான் கிடைக்கும், இதனால் இந்த தீவின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருளாகவும் இது திகழ்கிறது.
இயற்கையை பாதுகாக்க
மனிதனின் நடமாட்டம் இங்கு அதிகரிக்க தொடங்கியதும் நிலைமை தலைகீழாக மாறத்தொடங்கிவிட்டது.
இங்கிருந்த பல பறவை இனங்கள் அழியத்தொடங்கின, தீவெங்கும் எலிகள் பெருகின.
இதனை உணர்ந்த தீவின் வாசிகள் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து முதலில் சுற்றுப்பயணத்தை கட்டுபடுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
அதனால் ஒரே சமயத்தில் 400 பயணிகள் மட்டும் தான் தீவை சுற்றிப்பார்க்க அனுமதிக்க முடியும் 2015 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளை தீவு வாசிகள் மட்டுப்படுத்தினார்கள்.
சைக்கிள் பயணம்
டீசல் மின் பிறப்பாக்கியின் மூலம் மின்சாரத்தினை பெற்றுக்கொண்டிருந்த தீவு சூரியப்படல் மூலம் மின்சாரத்தினை பெறும் முயற்சிக்கு மாறியுள்ளது.
தீவின் இயற்கை கழிவுகள் முழுக்க முறைவழியாக்கப்பட்டு உரமாக்கப்பட்டன.
இதிலும் வினோதமான விடயம் இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கார் மூலம் தீவை சுற்றிப்பார்க்க முடியாது.
சைக்கிளில் தான் பயணம் செய்ய முடியும், தீவின் சுற்றளவும் குறைவு என்பதால் அது சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய அனுபவத்தினை அளிக்கின்றதாம்.
இந்த தீவு வாசிகளின் இத்தைகைய தனித்துவமான முயற்சியின் விளைவால் யுனெஸ்கோ அமைப்பு இந்த தீவுக்கு "உலக பாரம்பரிய தீவு" எனும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இத்தனை சிறப்புள்ள இந்த தீவுக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல வேண்டும் என்பது பலரது விருப்பமாகவுள்ளது.