1.7 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை
Sri Lanka Tourism
Tourism
Tourist Visa
By Independent Writer
ஒக்டோபர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 23,000இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.7 மில்லியனைக் கடந்துள்ளது.
இந்தியாவிலிருந்து 10,062 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 43% சதவீதமாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா பயணிகளின் வருகை கணிப்பு
மேலும் சீனாவிலிருந்து 2,128 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 1,266 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி முழு ஆண்டுக்கான சுற்றுலா பயணிகளின் வருகை 2.37 மில்லியன் முதல் 2.6 மில்லியன் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்