இலங்கையில் 21 இந்திய இளைஞர்கள் கைது
சுற்றுலா விசா நிபந்தனைகளை மீறி நீர்கொழும்பில் உள்ள இணையவழி சந்தைப்படுத்தல்(ஒன்லைன் மார்க்கெட்டிங்) மையத்தில் செயல்பட்ட 21 இந்திய இளைஞர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீர்கொழும்பில் உள்ள வாடகை வீடானது கணினிகள் மற்றும் பிற சாதனங்கள் பொருத்தப்பட்ட அலுவலக இடமாக மாற்றப்பட்டிருந்ததை சோதனையிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இணையவழி
அத்தோடு 24 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட ஆண் வெளிநாட்டவர்கள் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்ததாக மூத்த குடிவரவு அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நடந்து வரும் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 31 ஆம் திகதி வரை நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச விசா நிபந்தனையை இந்த குழு பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைது
எவ்வாறாயினும், சட்டத்தின் கீழ் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருபவர்கள் ஊதியம் இல்லாத வேலைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இல்லுக்பிட்டியவின் அறிவுறுத்தலின் பேரில் வெலிசறவில் உள்ள திணைக்களத்தின் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |