கொரோனா உச்சத்தில் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய சுற்றுலாதாரிகள்
சுற்றுலா குமிழி என்ற நடைமுறையின் கீழ் 44 ரஷ்ய சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கியுள்ளனர்.
இந்த தகவலை ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பதிவில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசு சுற்றுலா பயணிகளை தொந்தரவு செய்யாத வகையில் சுகாதார பரிந்துரைகளை எளிதாக்க வேண்டும்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, கடந்த வாரம் சுற்றுலாத் துறையினருடனான கலந்துரையாடலில், உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டு இலங்கை சுற்றுலாத் துறையை புத்துயிர் பெற அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், சுகாதார பரிந்துரை மற்றும் விசா வழங்கும் செயல்முறை எளிதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
70% க்கும் அதிகமான ரஷ்ய சுற்றுலா பயணிகள் கடைசி நிமிடத்தில் டிக்கெட் வாங்குகிறார்கள், எனவே விசா பெற நேரம் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் இழப்பை எங்களால் தடுக்க முடியவில்லை.
ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து இரண்டாவது விமானம் 44 பயணிகளுடன் இன்று காலை 06.10 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.