பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 44,293 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 297,054 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 5,823 என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள்
அதன்படி, ரஷ்யாவிலிருந்து 5,795 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,710 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் சீனாவிலிருந்து 3,100 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 3,185 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 2,167 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
அத்துடன் போலந்திலிருந்து 2,142 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,597 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)