இந்தியா,ரஷ்யாவிலிருந்து வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
மார்ச் மாதத்தில் 175,661 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
புதிய தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 45,650 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது மொத்த எண்ணிக்கையில் 26% ஆகும்.
நாடுகளிலிருந்து வருகை தந்தோர்
ரஷ்யாவிலிருந்து 15,579 பேரும், ஜெர்மனியிலிருந்து 12,603 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,030 பேரும், சீனாவிலிருந்து 13,449 பேரும் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 10,219 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 732,316 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து 145,390 பேரும், ரஷ்யாவிலிருந்து 65,812 பேரும் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 77,358 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அநுர அரசால் புறக்கணிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கான முன்னேற்றம்! முன்னாள் நீதியமைச்சர் பகிரங்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்