பிரித்தானிய விமானப்படை தள சதித்திட்டத்தின் பின்னணியில் ஈரான்! பர்ன்ஹாம் அதிரடி தகவல்

United States of America United Kingdom Iran Andy Burnham
By Dharu Sep 30, 2026 06:58 PM GMT
Report

பிரித்தானியாவின் முக்கிய விமானப்படை தளமான ‘ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்ட்’ (RAF Fairford) அருகே முறியடிக்கப்பட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில், ஈரானுக்குத் தொடர்பு இருப்பதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் வரலாற்றில், பாதுகாப்பு அச்சுறுத்தல் விவகாரம் ஒன்றில் ஈரானின் பெயரை அந்நாட்டு அரசு பகிரங்கமாகக் குறிப்பிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். 

தென்மேற்கு இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள இந்த விமானப்படை தளம், பிரித்தானியா சொந்தமானது என்றாலும் ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்க விமானப்படையால் (US Air Force) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நூலிழையில் தப்பிய இஸ்ரேல் விமான பயணிகள் : இஸ்ரேல் பிரதமர் பாராட்டு : சதியில் ஈடுபட்ட விமானி கைது

நூலிழையில் தப்பிய இஸ்ரேல் விமான பயணிகள் : இஸ்ரேல் பிரதமர் பாராட்டு : சதியில் ஈடுபட்ட விமானி கைது

அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை

குறிப்பாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கனரக குண்டுவீச்சு விமானங்களை (US Bombers) இயக்குவதற்கு இத்தளம் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டு வந்தது.

பிரித்தானிய விமானப்படை தள சதித்திட்டத்தின் பின்னணியில் ஈரான்! பர்ன்ஹாம் அதிரடி தகவல் | Plot Targeting British Airbase Iran

இதன் காரணமாகவே, ஈரான் ஆதரவு குழுக்கள் இத்தளத்தை இலக்காகத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, விமானப்படை தளத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த லண்டனைச் சேர்ந்த, 23 முதல் 25 வயதுடைய 5 பேரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் அந்நாட்டு காவல்துறை அதிரடியாகக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட 5 நபர்களும் தற்போது கடுமையான நிபந்தனைகளுடன் பொலிஸ் பிணையில் (Bail) செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஈரானின் நிழல் குழுக்கள் (Proxies) மூலமாகத் தூண்டப்பட்டு, பணத்திற்காக இந்தச் சதியில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் பிரிட்டனின் 'எம்.ஐ.5' (MI5) மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து விரிவான கூட்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

பிராந்திய பாதுகாப்புக்காக எதையும் செய்வோம்! ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு அமெரிக்க எச்சரிக்கை

பிராந்திய பாதுகாப்புக்காக எதையும் செய்வோம்! ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு அமெரிக்க எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019