இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நூதன முறையில் கொள்ளை
இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணமோசடி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் 8 முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த ஸ்தலங்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பெறுமதிசேர் வரி அதிகரிப்பே காரணம் எனக் கூறி கப்பம் பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பற்றுச்சீட்டுக் கட்டணம் தன்னிச்சையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பற்றுச்சீட்டு கட்டணங்கள்
அநுராதபுரத்தில் காணப்படும் பௌத்த ஸ்தலங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய கலாசார நிதியத்தினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டு கட்டணம் 25 அமெரிக்க டொலர்களாகும், இது இலங்கை நாணயத்தில் தோராயமாக 8,075 ரூபாவாகும்.
சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டொலருக்கு பணம் கொடுத்து பற்றுச்சீட்டுக்களை பெறுவதாகவும், பெரும்பாலானோர் ரூ.9,600க்கு மேல் கட்டணம் வசூலிப்பதாகவும் சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |