16 இலட்சம் பேர்: நாட்டுக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
Tourism
Tourist Visa
By Dhilak
இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் இந்த நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் பிரகாரம் இதுவரையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 161,949 ஆகும்.
கடந்த மாதத்தில் சுமார் 27 நாட்களில் 117,141 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
நாடுகள்
அவர்களில் பெரும்பாலோர் இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என பயண முகவர் சங்கத்தின் தலைவர் நளின் ஜயசுந்தர அண்மையில் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
மரண அறிவித்தல்