சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள கைகோர்க்கும் Toyota உள்ளிட்ட 14 ஜப்பானிய வாகன நிறுவனங்கள்
உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும், வேகமாக விரிவடைந்து வரும் சீன வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிரான தங்கள் போட்டித்திறனை வலுப்படுத்தவும், Toyota, Honda, Nissan மற்றும் Mazda உள்ளிட்ட 14 ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்கள், வாகன உதிரிபாகங்களையும் மூலப்பொருட்களையும் தர நிர்ணயம் செய்வதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
இந்த முன்னெடுப்பானது, ஜப்பான் வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தால் (JAMA), ஜப்பான் வாகன உதிரிபாகத் தொழில்கள் சங்கத்துடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உற்பத்தியாளர்கள் ஆரம்பத்தில் மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை வாகனங்கள்
Steel - கொள்முதல் செலவுகளைக் குறைப்பதற்காக மூலப்பொருள் விவரக்குறிப்புகளைத் தரப்படுத்துதல்.

Plastics: குறிப்பாக மீள் சுழற்சி செய்யப்பட்ட பொருட்களுக்கு, பொதுவான தர நிர்ணயங்களை நிறுவுதல்.
Wiring harnesses: மின்சார கூறுகளின் வகைகளைக் குறைத்து, உற்பத்தித் தன்னியக்கத்தை ஊக்குவிக்கின்றன.
இந்த முன்னெடுப்பானது, தேவையற்ற உற்பத்திச் செலவுகளைக் குறைத்து, விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கான வளங்களை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டித்தன்மை வாய்ந்த விலையிலான வாகனங்கள், மேம்பட்ட மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறுகிய வாகன மேம்பாட்டுச் சுழற்சிகள் ஆகியவற்றின் மூலம் தங்களது உலகளாவிய சந்தைப் பங்கை விரிவுபடுத்தியுள்ள சீன உற்பத்தியாளர்களிடமிருந்து, ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்கள் பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக வாகனத் தொழில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஒரு அடித்தளத்தை அமைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்று ஜாமா தலைவரும், டொயோட்டா துணைத் தலைவருமான கோஜி சாட்டோ கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கூட்டு முயற்சியானது நிறுவனங்களின் இணைப்பை உள்ளடக்கவில்லை என்றும், மாறாக செயல்திறனை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய வாகனச் சந்தையில் ஜப்பானின் போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு குறிப்பிடத்தக்க, தொழில் துறை தழுவிய முயற்சியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |