வாகன விற்பனையில் நான்காவது ஆண்டாக முன்னிலை வகிக்கும் டொயோட்டா நிறுவனம்
ஜப்பானின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா, 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக அதன் குழுமம் மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
டொயோட்டா 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 11.23 மில்லியன் யூனிட் மோட்டார் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
அதிகரித்துள்ள விற்பனை
டொயோட்டா மற்றும் டிரக் உற்பத்தியாளர் ஹினோவின் கீழ் Daihatsu மோட்டார் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த மோட்டார் வாகன அலகுகளின் அளவும் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
2022 உடன் ஒப்பிடும்போது, டொயோட்டா குழுமத்தின் வாகன அலகு விற்பனை 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரண்டாமிடத்தில் ஜெர்மனியின் வோக்ஸ்வேகன்
ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் 9.24 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
முந்தைய ஆண்டில் டொயோட்டா விற்பனை செய்த மோட்டார் வாகன அலகுகளின் அதிகபட்ச எண்ணிக்கை 2019 இல் 10.74 மில்லியன் யூனிட்கள் விற்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |