யாழ். மாநகர சபையின் அத்துமீறல் : போராட்டத்தில் குதித்த பழக்கடை வியாபாரிகள்!

Jaffna Sri Lanka
By Raghav Feb 06, 2025 08:40 AM GMT
Report

யாழ். மாநகர சபையின் (Jaffna Municipal Council ) மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து பழக்கடை வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (06.02.2025) யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, யாழ். மாநகர சபையினரால் குறித்த பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகளின் வருமானம் முழுமையாக பறிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காட்டிக் கொடுத்த வைத்தியர் சத்தியமூர்த்தி : சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

காட்டிக் கொடுத்த வைத்தியர் சத்தியமூர்த்தி : சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

பழக்கடை வியாபாரிகள்

இது தொடர்பில் பழக்கடை உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது “வியாபாரிகளாகிய நாம் அன்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக எமது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு யோகேஸ்வரி பற்குணராஜாவை கொண்ட ஈ.பி.டி.பியின் ஆட்சி அதிகார வரையறைக்குள் யாழ் மாநகர சபை இருந்தபோது இந்த கடைகள் எமக்கு வழங்கப்பட்டன.

யாழ். மாநகர சபையின் அத்துமீறல் : போராட்டத்தில் குதித்த பழக்கடை வியாபாரிகள்! | Traders Protest In Jaffna

இதற்காக நாம் யாழ். மாநகரசபைக்கு ஆரம்பதில் 3000 ரூபாவும் தற்போது 7500 ரூபாவும் வரியாக செலுத்தி வருகின்றோம். 

இந்நிலையில் தற்போதும் மேலும் 300 ரூபா வரி உயர்வு என கூறுகின்றனர் அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப் : சாமர்த்தியமாக நழுவும் அநுர

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப் : சாமர்த்தியமாக நழுவும் அநுர

யாழ். மாநகரசபை

இதேநேரம் கடைகளின் முகப்பு போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் எம்மிடம் தெரிவித்ததற்கு இணங்க அதையும் சில அடிகள் உள்ளே எடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம்.

யாழ். மாநகர சபையின் அத்துமீறல் : போராட்டத்தில் குதித்த பழக்கடை வியாபாரிகள்! | Traders Protest In Jaffna

மேலும், வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து ஏறக்கறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை செய்கின்றனர். 

இங்கு 31 கடைகள் உள்ளன. இவற்றில் குறைந்தது 100 பேர் தொழில் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் தங்கியுள்ளது.

இந்நிலையில் யாழ். மாநகரசபையின் அதிகரிகள் எமது கடைகளின் அளவை அதாவது அகலந்தை குறைத்து அடையாளமிடும் நடவடிக்கையை நேற்றையதினம் முன்னெடுத்தினிருந்தனர்.

ஆனால் நாம் எதிர்ப்பு காட்டியதை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஏற்கனவே 6 அடிகள் தான் ஒரு கடைக்கான இடப்பரப்பாக வழங்கப்பட்டது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை : பிரதமருக்கு பறந்த கடிதம்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை : பிரதமருக்கு பறந்த கடிதம்

அநுர அரசின் கட்டளை

இந்த 6 அடிக்கள் பொருட்டகள், பழங்களை வைத்து விற்பனை செய்யும் தளபாடங்கள், குறைந்தது 3 வியாபாரிகள் என வியாபார நடவடிக்கைகளை கடும் சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் அந்த 6 அடி அகலத்ததையும் மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க தற்போது முயற்சி செய்து அதற்கான அடையாளமிடலுக்காக நேற்றையதினம் (05.02.2025) வருகை தந்து நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தனர். அதற்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை நிறுத்தியிருந்தோம்.

யாழ். மாநகர சபையின் அத்துமீறல் : போராட்டத்தில் குதித்த பழக்கடை வியாபாரிகள்! | Traders Protest In Jaffna

அதுமட்டுமல்லாது பல்வேறு கடன்களை பெற்றே நாம் இந்த சிறு முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளோம். இதன் வருமானத்தை வைத்தே பிள்ளைகள் இன்று கல்வி கற்று வருகின்றார்கள். மாநகரசபையின் இந்த செயற்பாட்டால் அவர்களுடைய நிலையும் கவலைக்கிடமானதாக முடியும்.

இதேநேரம் நாட்டை சுத்தம் செய்வோம் என கோசமிட்டு எமது வாக்குகளை வசப்படுத்தி வெற்றியீட்டிய அனுர தலைமையிலான அரசாங்கம் தான் கூறிய வாக்கறுதிகளை மீறி எம்மை ஏமாற்றிவருகின்றது.

அனுர அரசின் கட்டளைப்படியே தாம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வாறாயின் மக்களின் அனைத்து செயற்பாடகளையும் பொருளாதார ஈட்டலையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை வீதியில் விடுவதா இந்த அரசின் “கிளின் சிறீலங்கா” திட்டம் என்ற சந்தேகம் எழுகின்றது.

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சுயதொழில் நடவடிக்கை

இதேநேரம் நாம் நாட்டுக்கு சுமையாக இருக்கவில்லை. வேலை வாய்ப்பு தா என கோரவில்லை. அதற்காக வீதியில் இறங்கி போராடவும் இல்லை. சுய தொழில் நடவடிக்கைகளையே எம்மால் முடிந்த முதலீடுகளை செய்து முன்னெடுத்துவருகின்றோம்.

யாழ். மாநகர சபையின் அத்துமீறல் : போராட்டத்தில் குதித்த பழக்கடை வியாபாரிகள்! | Traders Protest In Jaffna

இதேநேரம் எமது இந்த சுயதொழில் நடவடிக்கையை தடுத்து, தமது வருமானத்தை மட்டும் குறியாக கொண்டு இயங்கும் தற்போதைய அரசும் மாநகரசபையும் இந்த மாநகரசபை எமக்கான பொருளாதார ஈட்டலை வழங்குமா?

எனவே எமக்கான நியாயம் கிடைக்காவிடின் நியாயத்திற்காக நாம் எம்மால் முடிந்தவரை தொடர்ந்தும் போராடுவதற்கு தயாராகவே இரக்கின்றோம் என தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த எமது பகுதியில் எத்தனையோ அத்தியாவசிய தேவைகள் யாழ் மாநகரசபையினால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிள்ளது. ஆனால் அவற்றைந அவர்கள் செய்வதில்லை.

குறிப்பாக பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வடிகால் பகுதியில் ஏறத்தாள 2 அடிக்கும் மேலாக கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. அதனால் துர்நாற்றம் அதிகமாக உள்ளது. இதை எடுத்துக் கூறி சீர் செய்ய கோரினாலும் யாழ் மாநகரசபை கண்டுகொள்வதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன் 

மீளப் பெறப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை

மீளப் பெறப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை

தையிட்டி விகாரை குறித்த அர்ச்சுனாவின் கருத்து : முரளிதரன் கடும் எதிர்ப்பு

தையிட்டி விகாரை குறித்த அர்ச்சுனாவின் கருத்து : முரளிதரன் கடும் எதிர்ப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026