போக்குவரத்துக் கட்டணம் உயர்வு? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
Travel
Colombo
Dilum Amunugama
SriLanka
By Chanakyan
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் போக்குவரத்துக் கட்டணத்திலும் உயர்வு ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
அவ்வாறானதொரு முடிவை இன்னும் எடுக்கவில்லை.
போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
எனினும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.