பண்டிகைக் காலத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்கள் குறித்து சாரதிகளுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
மூச்சுப் பரிசோதனை
அத்தோடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம், மூச்சுப் பரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் (Excise Department of Sri Lanka) அறிவித்துள்ளது.
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்பட வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
