கோப்பாய் சந்தி வீதி சமிக்ஞை மின்விளக்கின் மின்சாரம் துண்டிப்பு - மின்சார சபையின் பொறுப்பற்ற செயல்
கோப்பாய் சந்தியில் (Kopai Junction) அமைந்துள்ள வீதி சமிக்ஞை மின்விளக்கின் மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீதி சமிஞ்ஞை மின்விளக்கின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை இன்றைய தினம் திங்கட்கிழமை திடீரென துண்டித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பில் உள்ள கோபாய் சந்தி மின் சமிஞ்ஞை விளக்குக்கான மின்சார கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில் மின்சார சபை குறித்த மின்னினைப்பை துண்டித்துள்ளது.
மக்களுக்கு ஏற்படும் ஆபத்து
குறித்த சம்பவம் தொடர்பில் புத்தூர் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மின்விளக்கு அமைந்துள்ள சந்தியானது மிகவும் நெரிசல் மிக்க பாரவூர்திகள் கடந்த செல்லும் சந்தியாக காணப்படுகிற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சந்தியில் விபத்து ஒன்றும் பதிவாகி இருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் மின்சாரத்தை துண்டித்தமை கண்டிக்கத்தக்க விடயம் என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்