நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது களனிப் பால வீதி!
புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் வீதி திருத்த வேலை காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (12) வரை மூடப்படும் என நெடுஞ்சாலை சுற்றுலா காவல்துறை அறிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த வீதியானது நேற்று (09) இரவு 9 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (12) காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒருகுடவத்தை சந்தியிலிருந்து களனி பாலத்திற்குள் நுழைவது மற்றும் பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து துறைமுக நுழைவாயிலுக்குள் நுழையும் பாதைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புப் பலகைகள்
மேலும், கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் ஒருகுடாவத்தையிலிருந்து கட்டுநாயக்கவிற்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் இந்த மூடலால் தடைப்படாது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திருத்தப்பணிகள் இடம்பெறும் காலங்களில், ஒருகுடவத்தை - வெல்லம்பிட்டிய வீதியில் தெமட்டகொட, பேலியகொட, நீர்கொழும்பு வீதி, மீன் சந்தைக்கு அருகில், கண்டி வீதி, தோரண சந்தி ஆகிய இடங்களில் அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |