யாழிலிருந்து கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றவருக்கு ஏற்பட்ட துயரம்
jaffna
death
gautharimunai
By Jaso
கிளிநொச்சி கெளதாரி முனை கடலில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களோடு சேர்ந்து கெளதாரி முனைக்கு சுற்றுலா வந்து கடலில் குளித்த போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.
கடலில் மூழ்கியவரை நண்பர்கள் ஆபத்தான நிலையில் மீட்டு பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் போதே இடையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி