தாய்லாந்தில் தொடருந்து மீது கிரேன் விழுந்ததில் கோர விபத்து: 22 பேர் பலி!
தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் பயணிகள் தொடருந்து மீது கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, குறித்த விபத்தில் 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பெங்கொக் நகரிலிருந்து இன்று (14.01.2026) காலை உபோன் ரத்சதானி மாகாணத்தை நோக்கி புறப்பட்ட குறித்த தொடருந்து , நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விசாரணை
குறித்த பகுதியில் உள்ள தொடருந்து பாதையில் அதிவிரைவு தொடருந்து திட்டத்துக்கான பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென சரிந்து தொடருந்தின் மீது விழுந்துள்ளது.

இதனால் குறித்த தொடருந்து தடம் புரண்டு, அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிரேன் மோதியதில் தொடருந்தின் மூன்று பெட்டிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சேதமடைந்த மூன்று பெட்டிகளில் இருந்த பயணிகளே விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த தொடருந்தில் 195 பயணிகள் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |