யாழ் ராணி புகையிரதத்துடன் மோதுண்டு முதியவர் பலி
Jaffna
Kilinochchi
Accident
By Vanan
கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் யாழ் ராணி புகையிரத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் இன்று மாலை பலியாகியுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரத்துடன் பரந்தன் 1/4 ஏக்கர் திட்டம் உமையாள்புரம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன் போது இராமலிங்கம் இராஜேஸ்வரன் (வயது - 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் உடல் ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி