புகையிரதம் ஒன்று கனரக வாகனத்துடன் மோதி விபத்து !
Colombo
Train
Department of Railways
Heavy vehicle
By Mkkamshan
புகையிரதம் ஒன்று கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று மீரிகம பகுதியில் வைத்து கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் கனரக வாகனமும் புகையிரதமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 5.35 மணியளவில் புகையிரத தண்டவாளத்துக்கு இடையேயான குறுக்கு பாதையில் குறித்த கனரக வாகனம் பயணித்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கனரக வாகனத்தின் சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளர்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்