கொடிகாமத்தில் இன்று இரவு வயோதிபரை மோதி தள்ளியது ரயில்
Jaffna
Accident
Death
By Sumithiran
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில்
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் தெற்கில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரும் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் தொடருந்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி