வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து
Vavuniya
Accident
By Vanan
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்குச் சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே விபத்தில் சிக்கியது.
பல தடவைகள் விபத்து
விபத்தில் பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும், காவலாளிகள் நியமிக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி