மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள சேவைகள்
corona
train
sri laanka
By Shalini
இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் சிலவற்றை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பயணிகளின் பலத்த வேண்டுகோளின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி தினமும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்குமான சேவைகளும்,
(தினமும் 2 ரயில்கள்) கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்குமான ரயில் சேவையும்
அத்துடன் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கும் கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்குமான ரயில் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்