பல தொடருந்து சேவைகள் ரத்து: திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
தொடருந்து இயக்குனர்கள் (சாரதிகள்) பற்றாக்குறை காரணமாக இன்று (17) பல தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும், 42 இயக்குனர்கள் மட்டுமே உள்ளதாகவும் தொடர்ந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சீரான செயல்பாடுகளுக்கு மொத்தம் 68 தொடருந்து இயக்குனர்கள் தேவை என்பதுடன், 42 இயக்குனர்கள் மாத்திரமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதில் 27 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளதாகவும், 12 இயக்குனர்களுக்கு இரட்டை சேவைகளில் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடருந்து சேவைகள்
இதன் விளைவாக, சுமார் 25 தொடருந்து சேவைகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, தொடருந்து இயக்குனர்களை பதவி உயர்வு செய்வதற்கான பரீட்சைக்கு பலர் தயாராகி வருவதால், இன்று (17) காலை சுமார் 10 தொடருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |