ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்புலம் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய கோல் தோமஸ் ஆலனின் பின்புலம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஆலன் கலிபோர்னியா தொழில்நுட்ப கழகத்தில் பொறியிலாளர் பட்டம் பெற்றவர். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தனியார் நிறுவனத்தில் பொறியிலாளராகவும், பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். நாசாவிலும் அவர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
சிறந்த ஆசிரியருக்கான விருது
2024-ம் ஆண்டு கமலா ஹாரீசுக்கு நன்கொடை அளித்துள்ளார். மேலும், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றுள்ளார்.

இதேவேளை இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரி காஷ் படேல் கூறுகையில்,“இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது.
சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். மேலும் அவர் கைத்துப்பாக்கி மற்றும் கத்திகளை வைத்திருந்தார். குண்டு துளைக்காத கவச உடையும் அணிந்திருந்தார்" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |