தெற்கு கடலில் போதைப்பொருளை மீட்ட பணிப்பாளருக்கு இடமாற்றம்!
தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கபட்ட வரலாற்றில் பாரியளவிலான போதைப்பொருள் தொகையை பறிமுதல் செய்ய, தகவல் வழங்கிய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஹேமல் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் காவல்துறை மேலதிக படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இடமாற்றத்திற்கான காரணம் தொடர்பில் இன்னும் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
இரண்டு டன் போதைப்பொருள்
ஹேமல் பிரசாந்த சுமார் இரண்டு ஆண்டுகள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றினார்.
குறித்த காலப்பகுதியில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சுமார் இரண்டு டன் போதைப்பொருள் தொகையை கைப்பற்றியது.
இந்நிலையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடற்படை மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதக்கும் 51 போதைப்பொருள் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டன, அவற்றின் எடை 839 கிலோகிராம் ஆகும்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொதிகளில் 670 கிலோகிராம் ஐஸ் மற்றும் 156 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
