உடன் நடைமுறைக்கு வரும் வகையில் குற்றப்புலனாய்வு திணைக்கத்தினுள் நடைபெற்ற மாற்றங்கள்!
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியாக டப்ளியூ. திலகரத்ன (W. Tilakaratne) நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியாக இருந்த பிரதிப் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க (Prasad Ranasinghe) காவல்துறை தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த 2019 நவம்பர் மாதம் ஆட்சி மாற்றத்தின் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகரவை (Shani Abeysekara) அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, டப்ளியூ. திலகரத்ன (W. Tilakaratne) பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் 23 தொடக்கம் 2020ஆம்ஆண்டு மே நடுப்பகுதி வரை கடமைகளை முன்னெடுத்திருந்தார். அதன் பின்னரேயே பிரதி காவல்துறை மா அதிபராக தரமுயர்த்தப்பட்டு மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே மீண்டும் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவியில் கடமைகளை முன்னெடுக்கும் பொறுப்பு காலி பிரதி பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே. வதசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.