மகிந்த மற்றும் பசிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Supreme Court of Sri Lanka
Sri Lankan political crisis
By Kanna
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வகையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய உயர் நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விசாரணை நடத்துமாறு மனுத்தாக்கல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் உட்பட மேலும் மூவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 11 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி