மகிந்தவின் மீதான பயணத்தடை நீக்கப்பட்டது - தென் கொரியா நோக்கி பயணமாகிறார்!
Colombo
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
By Pakirathan
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீதான பயணத்தடையை எதிர்வரும் 20 ம் திகதி முதல் 30 ம் திகதி வரை நீக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணத் தடையை நீக்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய மாநாட்டில் பங்குகொள்ளும் மகிந்த
தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்குபெறுவதற்காக, பயணத்தடையை நீக்குமாறு முன்னாள் அதிபர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், 10 நாட்களுக்கு பயணத்தடையை நீக்க கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்