நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? சவேந்திர சில்வா வெளியிட்ட தகவல்
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணங்களைக் கட்டுப்படுத்துவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறுபட்ட சுகாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர் பொது இடங்களுக்குச் செல்பவர்கள் மூன்று கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றிருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 19 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்