நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை நீக்கப்பட்டது பயணக்கட்டுப்பாடு!
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த பயணக் கட்டுப்பாடு, இன்றிரவு 11 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளும் நோக்குடன் இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் தமது வீடுகளுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் செல்ல முடியும் எனவும், இன்று அடையாள அட்டை இலக்க முறை நடைமுறைப்படுத்தப்படாது என்றும் சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடொன்றிலிருந்து ஒரு நபருக்கு மாத்திரமே வெளியில் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
இதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தொடரும் என அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.