மூன்று பிள்ளைகளின் தந்தை யாழில் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ் - தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த எட்வேட் மதிவண்ணன் (வயது-41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரம் வெட்டும் கூலித்தொழிலாளியான இவர் நேற்றைய தினம் அளவெட்டி, மாசியப்பிட்டி பகுதியில் மரத்தினை கூலிக்காக வெட்டச் சென்றுள்ளார் அப்போது மரத்தை இழுத்து வீழ்த்த முற்பட்ட போது மரத்தினுள் வீழ்ந்து அகப்பட்டுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த நிலையில் நேற்றுமாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் இன்று யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.