வன்னி நிலப்பரப்பின் “தங்க மங்கை இந்துகாதேவி”க்கு கௌரவம் - நேரலையில்...
Jaffna
Pakistan
Mullaitivu
SriLanka
Oddusuddan
Indukadevi
Ibc Tamil
By Chanakyan
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு - புதியநகர் - புதியசூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றது.
இதில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் க.விமலநாதன், சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் செயலாளர் பத்மோதயன் ஜெயராணி ஆகியோர் பலந்து கொண்டுள்ளனர்.
தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இந்துகாதேவி, தனது திறமைமீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி, இன்று இச்சாதனையை படைத்து நாட்டுக்கும் முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஐ.பி.சி தமிழ் ஊடகம் பிரதான அனுசரனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான காணொளியின் நேரலை,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி