குறிஞ்சாக்கேணியில் மாணவர்கள் பலியான விவகாரம்- தவிசாளர் கைது
trinco
police
death
students
kinniya
By Kalaimathy
திருகோணமலை கிண்ணியா – குறிஞ்சாங்கேணி படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் கடந்த செவ்வாய்கிழமை மிதப்பு பாதை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டதோடு, எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
