இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை- பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!
trinco
police
sri lanka
death
suiceide
By Kalaimathy
திருகோணமலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவில், முள்ளிப்பொத்தானை பகுதியிலேயே இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்றதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை சதாம் நகரைச் சேர்ந்த அலிபுல்லா - அர்ஷான் வயது 22 என பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடைய தற்கெலைக்கான காரணம் தெரியவில்லையெனவும், இது தொடர்பான மேலதிக விசாரணையை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்..