திருகோணமலையில் பாரிய விபத்து - தம்பதியினர் படுகாயம் (படங்கள்)
Accident
By pavan
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மகிழுந்தில் பயணித்த தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (05.07.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து - அனுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது காற்றின் வேகத்தினால் மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் வேகமாக வந்த மகிழுந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காவல்துறை விசாரணை

இந்த விபத்தில் ஹொரவ்பொத்தான - கல்பே பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடைய இருவரே காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரவெவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி