திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பதவி உயர்வு!
Srilanka
Trincomalee
Saman Darshana Pandikorala
GotabhayaRajapaksha
By MKkamshan
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் தர்சன பாண்டிகோராள (Saman Darshana Pandikorala) கரும்பு, சோளம்,மரமுந்திரிகை, மிளகாய், கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு போக பயிர்ச்செய்கை அபிவிருத்தி,அதனோடு இணைந்த கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அரச தலைவர் செயலகத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து தமக்கான நியமன கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தம் கடமைகளை இராஜாங்க அமைச்சில் பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த 2020.10.26 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்றதுடன் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களின் பல்வேறு தேவைகளை விசேட கவனம் செலுத்தி செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
