சொன்னபடி நடக்கும் திருகோணமலை விவசாயிகள்
கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் நெல் அறுவடையின் போது திருகோணமலை(trincomale) மாவட்ட விவசாயிகள் 16,336 கிலோகிராம் நெல்லை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நெல் தம்பலகாமம் மற்றும் கந்தளாய் போர்டன்கடுவ பகுதிகளில் இருந்து பெறப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய மேலாளர் (கிழக்கு) டபிள்யூ.ஆர். அஜித் சாந்த குமார தெரிவித்தார்.
23 அரசு களஞ்சியசாலைகள்
2024/25 பெரும் போகத்திற்கான நெல் கொள்முதல் செய்வதற்காக திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை பகுதிகளை உள்ளடக்கிய 23 அரசு களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய மேலாளர் தெரிவித்தார்.
ஒரு கிலோ தரமான நாட்டு நெல்லுக்கு ரூ.120/=க்கும், ஒரு கிலோ சம்பா நெல்லுக்கு ரூ.130/=க்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லுக்கு ரூ.132/=க்கும் அரசு நெல் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் அரசு களஞ்சியசாலைகளுக்கு நெல்லை வழங்க தயங்குவதாகத் தெரிகிறது.
தனியார் வியாபாரிகள்
நெல் வயல்களுக்கு வரும் தனியார் வியாபாரிகள், தரம் எதுவாக இருந்தாலும், ஒரு கிலோ நாடு நெல்லுக்கு ரூ.125/= வழங்குகிறார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நெல் விவசாயியும் பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட குறைந்தது 300 கிலோகிராம் நெல்லை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்று முன்னதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
