கிழக்கில் அரங்கேறிய இனவெறி தாக்குதல்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (19) நடைபெறவிருந்த அடையாள அணிவகுப்பு தாமதமானதால் இன்னொரு நாள் அது முன்னெடுக்கபடும் எனவும் அதுவரையில் கைது செய்யப்பட்டவர்களது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடையாள அணிவகுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை காயப்படுத்தியமை மற்றும் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களது அடையாள அணிவகுப்பு இன்றையதினம் (19) முன்னெடுக்கப்படவிருப்பதாக காவல்துறையினரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த அடையாள அணிவகுப்பு இன்று முன்னெடுக்கப்படவில்லை என்றும் வேறொரு நாளில் அதனை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அது தொடர்பிலான அறிவித்தல் பின்னர் வழங்கப்படுவதாக நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
