இதுதான் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கமா? திருகோணமலை சம்பவம் குறித்து பவானி பொன்சேகா கேள்வி
திருகோணமலையில் தியாகி திலீபனின் ஊர்தி தாக்கப்பட்டமையும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்டமையும் சிறிலங்காவில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலிற்கான மற்றுமொரு உதாரணம் என மனித உரிமைகள் சட்டத்தரணி பவானி பொன்சேகா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் இதனையா நல்லிணக்கம் என தெரிவிக்கின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் ரணில்விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகமும் ஏனையவர்களும் இது குறித்து பேச்சுவார்த்தை நிகழ்த்தியுள்ளார்கள்.
வன்முறையைத் தூண்டும் இந்த விடயங்கள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்புவார்களா எனவும் டுவிட்டரில் பவானி பொன்சேகா பதிவிட்டுள்ளார்.
சிறிலங்காவில் ஆழமாக வேரூன்றியுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு பொருளாதார மீட்சி மாத்திரம் போதுமானதல்ல எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.