பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்
பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரே நேற்று (14) மட்டக்களப்பு - காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி கைது செய்தனர்.
பிள்ளையானால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளின், முக்கிய துப்பாக்கி சூடு நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையில் இவர் பிள்ளையானின் சகாவா? பிள்ளையானுக்கு ஆதரவாக பிள்ளையானின் ஏவலாளராக செயற்பட்டாரா என்பது குறித்து தேடுகின்ற போது கிடைக்கப்பெற்ற உண்மைகள் இவ்வாறு அமைகின்றது.
பிள்ளையானுக்கும் முகமட் ஷாகித்துக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில். திரிபோலி என்ற துணை இராணுவக்குழுவின் உறுப்பினரே இவர். 2008, 2009 காலப்பகுதியில் கிழக்கில் கொலைகளைச் செய்ததது என்ற அடையாளப்படுத்தப்பட்ட அமைப்பின் உறுப்பினர் தான் இவர். அதேபோன்று பிள்ளையானும் இந்த அமைப்புடன் சம்மந்தப்பட்டவர். அவ்வளவுதான் இவர்களுக்கு இருக்கக்கூடிய தொடர்பு.
திரிபோலியில் ஏராளமான முஸ்லிம் அமைப்புகள், பிள்ளையானின் குழு மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து கிழக்கில் அட்டூழியங்களை நிகழ்த்தினர்.
காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட முகமட் ஷாகித் என்பவர் பிள்ளையானின் சகாவாக வெளியுலகிறகு அம்பலப்படுத்தினாலும் இவர் பிள்ளையானின் சகா இல்லை. இதற்கு உதாரணமாக பிள்ளையான் குழுவிலிருந்த சாந்தன் என்ற நபரை கொலை செய்தவர் இந்த முகமட் ஷாகித் என சொல்லப்படுகின்றது.
இந்த சாந்தன் என்பவர் தான் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் நேரடியாகச் சம்மந்தப்பட்டவராக காணப்படுகின்றார். ஆகவே சாட்சியங்களை அழிக்கின்ற வேலையில் இப்படியானவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் அதிர்வு நிகழ்ச்சியில் காண்க......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
