கிளிநொச்சி ஏ-35 வீதியில் பாரஊர்தி தடம் புரண்டு விபத்து
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Laksi
கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் பகுதியில் பார ஊர்தியொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(23) காலை முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினரின் விசாரணை
முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்று உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வேகமாக வந்தேறிய மோட்டார் சைக்கிளுக்கு வழி விட முற்பட்ட வேலை குறித்த பார ஊர்தி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், விபத்து தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்