ரஷ்யாவை ட்ரம்ப் ஆதரித்தால் ..உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்
ரஷ்யாவை ஆதரிக்க டிரம்ப் முடிவெடுத்தால், அவர் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கே எதிரானவராக கருதப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இரண்டு வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்போரில் இதுவரை உக்ரைன் நாட்டு வீரர்கள் 31,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பொய்யான தகவல்களை பரப்ப பில்லியன்களில் புடின் செலவு
அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்ப பில்லியன்களில் புடின் செலவு செய்து வருகிறார். தற்போது அவர் அந்த முயற்சியில் வெற்றி அடைந்தது விட்டாரோ என தோன்றுகிறது.
டிரம்ப், புடின் பக்கம் நிற்பதை
டிரம்ப், புடின் பக்கம் நிற்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அமெரிக்க இராணுவம் ரஷ்ய இராணுவத்துடன் போர் புரிந்ததில்லை. அதனால் அவரது உண்மையான நோக்கங்களை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை.
நாங்கள் புடினை எதிர்த்து போரிட்டு வருகிறோம்; எங்களுக்கு தெரியும். நாங்கள் இப்போரில் வெற்றி பெறுவது எங்கள் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளின் கைகளில் உள்ளது. என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |