வரியால் மிரட்டும் ட்ரம்ப் : பாரிய நெருக்கடியில் கார் விற்பனையாளர்கள்
அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி விதிப்பால் ஐரோப்பிய கார் விற்பனையாளர்கள் பலரின் நிகர மதிப்பில் பல பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கார்களுக்கு ட்ரம்ப் மொத்தமாக 25 சதவீத வரிகளை அறிவித்துள்ளார்.
இந்த நகர்வு பிரித்தானியாவின் கார் தயாரிப்பாளர்களுக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய ஏற்றுமதி
சுமார் 6.7 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்களை அமெரிக்காவுக்கு பிரித்தானியா ஏற்றுமதி செய்து வருகின்றது.
பிரித்தானியாவின் சொகுசு கார் வகைகளான Range Rovers, Bentleys, Aston Martin, Rolls-Royce, Lotus மற்றும் Minis உள்ளிட்டவை அமெரிக்க சாரதிகள் மத்தியில் மிக மிக பிரபலமாகும்.
இந்தநிலையில், பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ், இன்னும் சில வரி விலக்குகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையின் மத்தியில் அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புகள்
கடந்த ஆண்டில் Aston Martin மட்டும் அமெரிக்காவுக்கு 1,928 எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடியால் வோக்ஸ்ஹால் உரிமையாளரான ஸ்டெல்லாண்டிஸின் பங்குகள் 4.2 சதவீதம் சரிந்தன.
இதுமட்டுமின்றி, ஜேர்மன் நிறுவனங்களான Porsche, Mercedes-Benz, BMW மற்றும் Volkswagen ஆகியவைகளின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டுள்ளன.
கார்கள் மீதான இந்த வரி விதிப்பு கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள Andrew Griffith, கார் உற்பத்தித்துறை தற்போது அழுத்தத்தில் இருப்பதாகவும், பிரித்தானியாவில் வேலைவாய்ப்புகள் தற்போது உண்மையான ஆபத்தில் உள்ளன என்பது தெளிவாகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
