டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட அறிவிப்பு: வரி அதிகரிப்பு தற்காலிக நிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஒவ்வொரு நாட்டிற்கும் அறிவிக்கப்பட்ட 10% வரி கட்டணங்களை செயல்படுத்துவதில் 90 நாள் இடைநிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
இருப்பினும், அந்தச் சலுகை சீனாவிற்குப் பொருந்தாது எனவும் அவர்கள் மீதான வரிகளை 125 சதவீதமாக உயர்த்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி, தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,“நான் 90 நாள் இடைநிறுத்தத்தை அங்கீகரித்துள்ளேன்.
சீனா மீதான வரி
மேலும் இந்தக் காலகட்டத்தில் 10% கணிசமாகக் குறைக்கப்பட்ட பரஸ்பர கட்டணமும் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய மரியாதையின்மையின் அடிப்படையில், சீனா மீதான வரிகள் 125% ஆக உயர்த்தப்படுவதுடன், இது உடனடியாக நடைமுறைக்கு வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை மீண்டும் பணக்காரர்களாக மாற்றுவதாக ட்ரம்ப் தேர்தல் வாக்குறுதி அளித்ததன் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிகள், உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பங்குச் சந்தைகள் சரிவை ஏற்படுத்தியுள்ளன.
டிரம்பின் வரி விதிப்பு
மேலும் உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கூட வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், ட்ரம்பின் வரி உயர்வைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை 84% ஆக உயர்த்தி பதிலடி கொடுத்துள்ளது.
இதற்கிடையில், பாரிய வரிகள் விதிக்கப்படுவதை எதிர்கொண்டு, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் வரி சதவீதங்களை மறுபரிசீலனை செய்யுமாறு ட்ரம்ப் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
