ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்: நிராயுத பாணியாக்கப்படுவர் - இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பு
புதிய இணைப்பு
காசாவில் பணயக்கைதிகள் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் (Benjamin Netanyahu) நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் நிராயுத பாணியாக்கப்படுவர் என்றும் காசா இராணுவமயமாக்கப்படாது. இது எளிதான வழியாக இருந்தாலும் அல்லது கடினமான வழியாக இருந்தாலும் அது அடையப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் 20 அம்ச கோரிக்கைகள் அண்மையில் முன்வைக்கப்பட்டது. அதனை ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) காசா மீதான குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்பின் முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவித்து, மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
பணயக்கைதிகளை விடுவித்து அதிகாரத்தை ஒப்படைக்க ஹமாஸ் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இறுதி எச்சரிக்கை
ஏறத்தாழ இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது இறுதி எச்சரிக்கையை ஹமாஸ் ஓரளவு ஏற்றுக்கொண்டதை டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.

இருப்பினும், இது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இன்னும் இருப்பதால் பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதி ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஏற்காவிட்டால் இதுவரை யாரும் பார்த்திடாத மோசமான விளைவுகள் ஏற்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 10 மணி நேரம் முன்